பெண்களுக்கு அதிகாரமளிக்க பாடுபட்டவர் ஜெயலலிதா.. பிரதமர் மோடி புகழாரம்

ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம், பெண்களுக்கு அதிகாரமளிக்க குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஜெயலலிதா செலுத்தியுள்ளதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

டெல்லி, பிப்-24

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளர். பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவுடன் தான் பேசிக்கொண்டு இருப்பது போன்ற புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

‘ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவர் மக்கள் சார்பு கொள்கைகள் மற்றும் நலிந்தவர்களின் அதிகாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக பரவலாக போற்றப்படுகிறார்.ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம், பெண்களுக்கு அதிகாரமளிக்க குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஜெயலலிதா செலுத்தியுள்ளார். ஜெயலலிதா உடனான கலந்துரையாடல்கள் என்றும் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன,’

இவ்வாறு மோடி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *