ரூ.84,686 கோடி கடன் வாங்க இலக்கு.. ஓ. பன்னீர்செல்வம்

தமிழகத்தின் நிதித் தேவைக்காக ரூ.84,686 கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னை, பிப்-23

தமிழக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், தமிழக நிதித் தேவைகளுக்காக ரூ.84,686 கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் நிலுவையிலுள்ள மொத்தக் கடன் ரூ.5,70,108.29 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி மதிப்பீட்டில் இது 26.69% ஆக இருக்கும். கடன் அளவு 15-ஆவது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளதாக பட்ஜெட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *