குடும்பத் தலைவர் விபத்தில் இறந்தால் ரூ.4 லட்சம் காப்பீடு.. இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் காப்பீடு..!

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவர் விபத்தில் மரணமடைந்தால் ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும், இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

சென்னை, பிப்-23

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆகையால், இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. எல்ஐசி மற்றும் யுனைடெட் காப்பீடு இந்தியா திட்டத்துடன் இணைந்து ஏழை மக்களுக்கு புதிய காப்பீடு திட்டம் துவக்கப்படும். இதற்கான தொகையை தமிழக அரசே ஏற்கும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் இருக்கும் குடும்ப தலைவர் இயற்கை மரணம் அடைந்தால் ரூ.2 லட்சம் காப்பீடு வழங்கப்படும். விபத்தில் மரணம் அடைந்தால், ரூ.4 லட்சம் காப்பீடு வழங்கப்படும்.

2021 ஜூன் மாதத்துடன் முடிவடையும் அரசு ஊழியரின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் நீட்டிக்கப்படும். ஒட்டுமொத்த காப்பீடு ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படும். குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கான காப்பீடு ரூ.7.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *