மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ‘RIGHTS’ என்ற சிறப்பு திட்டம்.. ஓபிஎஸ்
மாற்று திறனாளிகளின் நலனுக்காக ‘rights’ என்ற சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது என்றும் இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் பொருளாதார விவகாரத்திறையின் ஆய்வுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை, பிப்-23

தமிழக இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு ‘RIGHTS’ திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ‘RIGHTS’ என்ற சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறையின் ஆய்வுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் திட்டம் உலக வங்கிகள் பரிசீலனையில் உள்ளது. 2021 – 2022 ல் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.688.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.