பிரதமர் மோடி, ஜெர்மனி அதிபர் சந்திப்பு!!!

புதுடெல்லி, நவம்பர்-01

ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 

மூன்று நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவம்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றனர்.

இந்தியா வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், மாபெரும் நாடான இந்தியாவின் பன்முகத்தன்மையை மிகவும் மதிப்பதாகவும் ஏஞ்சலா மெர்க்கல் அப்போது குறிப்பிட்டார். இந்தியாவும்-ஜெர்மனியும் நெருக்கமான உறவைப் பேணுவதாகவும் அவர் கூறினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் அளிக்கப்பட்ட வரவேற்பைத் தொடர்ந்து, ராஜ்காட் சென்ற ஏஞ்சலா மெர்க்கல், மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

மூன்று நாள் அரசு முறைப்பயணமாக தமது அமைச்சர் குழுவுடன் டெல்லி வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், பிரதமர் மோடியுடன் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையை அடுத்து இந்தியா ஜெர்மனி இடையே 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *