கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு ..!

தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என அறிவித்தார்.

சென்னை, பிப்-23

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மாநிலத்தின் மொத்த வரி வருவாய் ரூ.1,35,641 கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *