இடைக்கால பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?.. முழு விவரம்

சென்னை, பிப்-23

2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ள விவரம்:-

 • உள்ளாட்சி துறைக்கு 22,218 கோடி ரூபாய் ஒதுக்கீடு
 • நீர்வள ஆதாரத் துறைக்கு 6,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு
 • பயிர்க்கடன் தள்ளுபடிக்காக இடைக்கால வரவு செலவு திட்டம் மதிப்பீட்டில் ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1
 • வேளாண்மைத் துறைக்கு 1,738 கோடி ரூபாய் ஒதுக்கீடு
 • மீன்வளத் துறைக்கு 580 கோடி ரூபாய் ஒதுக்கீடு
 • நீதித்துறை நிர்வாகத்துக்கு 1,437 கோடி ரூபாய் ஒதுக்கீடு
 • 1,580 கோடி ரூபாயில் மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்
 • பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு 3,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு
 • காவல்துறைக்கு வரும் ஆண்டில் ரூ.9,567 கோடி ஒதுக்கிடு செய்யப்படும்.
 • தமிழக தொழில் முதலீட்டு கழகத்துக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுக்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக RIGHTS என்ற சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அவர்களின் நலனுக்காக ரூ.688.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • சுகாதாரத்துறைக்கு ரூ.19,420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • உயர்கல்வித்துறையில் ரூ.5,478.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • காவல்துறையை நவீனமயமாக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • அம்மா சிறு மருத்துவமனைகளுக்கு ரூ.144 கோடி ஒதுக்கீடு
 • சமூக நலத்துறைக்கு 1,953 கோடி ரூபாய் ஒதுக்கீடு
 • மாற்றுத் திறனாளிகளுக்கான வாய்ப்பு, வசதிகளை உறுதி செய்ய 1,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்புத் திட்டம்
 • ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 1,932 கோடி ரூபாய் ஒதுக்கீடு ரூ.144 கோடி ஒதுக்கீடு
 • மின்கட்டண மானியங்களுக்கு ரூ.8,834 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • இளைஞர் நலன் மற்றமு் வளையாட்டு மேம்பாட்டுத்தறைக்கு ரூ.229 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • புதிய நீதிமன்றங்களை கட்ட 289.78 கோடி ரூபாய் உட்பட நீதித்துறைக்கு 1,437.82 கோடி ஒதுக்கீடு
 • விவசாயிகளின் பயிர்க்கடன் திட்டத்திற்கு 1738.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு
 • நகர்ப்புற வடிகால் திட்டம் 1,450 கோடி ரூபாய் ஒதுக்கீடு
 • ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு 2,350 கோடி ரூபாய் ஒதுக்கீடு
 • சத்துணவுத் திட்டத்திற்கான மதிப்பீடுகளில் ரூ.1,953.98 கோடி ஒதுக்கீடு
 • சத்துணவுத் திட்டத்திற்கான மதிப்பீடுகளில் ரூ.1,953.98 கோடி ஒதுக்கீடு
 • சென்னையை தனித்தன்மை வாய்ந்த நகரமாக மாற்ற ரூ.3,410 கோடி ஒதுக்கீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *