அ.தி.மு.க. புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்

சென்னை, நவம்பர்-01

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் இருவரும் பதவியேற்றுக்கொண்டர்.

தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அக்டோபர் 21-ல் தேர்தலும், 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. இதில் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. விக்கிரவாண்டியில் 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனும், நாங்குநேரியில் 32,445 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வி.நாராயணனும் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற இருவரும் கடந்த மாதம் 25-ம் தேதி சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களது வெற்றிச் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிலையில், இன்று இரண்டு எம்எல்ஏக்களும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுடன் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 

பின்னர் சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் முன்னிலையில் முத்தமிழ்ச்செல்வன், ரெட்டியார்பட்டி நாராயணன் இருவரும் எம்எல்ஏக்களாக பதவியேற்றனர். சபாநாயர் அறையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. புதிய எம்எல்ஏக்கள் இருவருக்கும் சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். எம்எல்ஏக்கள் இரண்டு பேர் இன்று பதவியேற்றதன் மூலம், சட்டசபையில் அதிமுகவின் பலம் 124 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *