விஜய் சேதுபதியின் அடுத்த படம் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்”
சென்னை, அக்டோபர்-31
விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, ஆண்டுக்கு 8 முதல் 10 திரைப்படங்களில் நடித்து வருகிறார். தளபதி 64, கடைசி விவசாயி, லாபம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகவும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் அவரது நடிப்பில் உருவாகும் 33-வது படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தப் படத்துக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை வெங்கட கிருஷ்ணா ரோஹாந்த் இயக்குகிறார். சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.