ஆஸ்திரேலியா ஓபன்.. ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்

ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் ரஷிய வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

பிப்-22

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் கடந்த 8-ந்தேதி தொடங்கியது. நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்.ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், 4-ம் நிலை வீரரான ரஷியாவின் டேனில் மெட்வதேவும் பலப்பரீட்சை நடத்தினார்கள்.

இதில் ஜோகோவிச்சின் ஆட்டத்திற்கு மெட்வதேவால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஜோகோவிச் முதல் செட்டை 7-5 எனக் கைப்பற்றினார். 2-வது செட்டை 6-2 எனவும், 3-வது செட்டை 6-2 எனவும் எளிதாக கைப்பற்றி நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றதுடன் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

33 வயதான ஜோகோவிச் இந்த வெற்றியின் மூலம் 9 முறை ஆஸ்திரேலிய கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். பிரெஞ்ச் ஓபனை ஒரு முறையும், விம்பிள்டனை ஐந்து முறையும், அமெரிக்க ஓபனை மூன்று முறையும் வென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *