தீயணைப்புத்துறை டிஜிபியாக சைலேந்திரபாபுவுக்கு கூடுதல் பொறுப்பு

சென்னை, அக்டோபர்-31

தீயணைப்புத்துறை டிஜிபி காந்திராஜன் ஓய்வுப்பெற்றதை அடுத்து தீயணைப்புத்துறை டிஜிபி பொறுப்பு கூடுதலாக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புத்துறை டிஜிபியாக பதவி வகித்த காந்திராஜன் இன்று ஓய்வு பெற்றார். சென்னை ராஜரத்தினம் போலீஸ் மைதானத்தில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. காந்திராஜன் ஓய்வை அடுத்து 11 டிஜிபிக்கள் எண்ணிக்கை தற்போது 10 ஆக குறைந்துள்ளது. காந்திராஜன் ஓய்வுப்பெற்றதை அடுத்து அவர் வகித்துவந்த தீயணைப்புத்துறை டிஜிபி பொறுப்பை ரெயில்வே டிஜிபி சைலேந்திர பாபு கூடுதலாக கவனிப்பார் என்று உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவின்மூலம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *