நவ.2-ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை!!!

சென்னை, அக்டோபர்-31

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் நவம்பர்-2ம் தேதி நடைபெறவுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் நவம்பர் மாதம் 2-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கவுள்ளார். காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் கூடவுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில் அமைச்சரவை கூட்டம் கூடுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2-ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது. துறை சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் ஆகியவைகளும் வழங்க வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *