மாவட்டம் முழுவதும் சிறப்புப் பொதுக்குழு கூட்டம்.. தேர்தல் களத்தில் குதித்த பாமக..!

சட்டப்பேரவைத் தேர்தல் வருவதை ஒட்டி பாமக தொண்டர்களை தயார்படுத்த தொடங்கியுள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் பொதுக்குழு கூட்டம் நடத்த ஜி.கே.மணி அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை, பிப்-20

இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி விடுத்துள்ள அறிக்கை:

“தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள், வாக்குச்சாவடிகள் நிலையிலான களப்பணிகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பிப்.22 காலை 11.00 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழு கூட்டங்கள் நடத்தப்படவிருக்கின்றன.

பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வழிகாட்டுதலின்படி இந்தக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. கட்சியின் மாநிலப் துணைப் பொதுச் செயலாளர்கள் நிலையிலான மாவட்ட வாரியாக இந்தக் கூட்டம் நடத்தப்படும். 2021- ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்பதற்காக இதுவரை செய்துள்ள ஏற்பாடுகள், பணிகள் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளன.

வாக்குச்சாவடிகள் நிலையில் களப்பணிகளை மேற்கொள்ள ஏற்கெனவே ஆணையிடப் பட்டுள்ள நிலையில், அது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது. கூட்டத்தின் முடிவில் ஒவ்வொரு தொகுதியிலும் களப்பணிகளை மேற்கொள்ளவுள்ள, ஒருங்கிணைக்கவுள்ள நிர்வாகிகள், களப்பணியாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்”.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *