சஞ்சய் தத் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டது எப்படி? பேரறிவாளன் மனு மீது மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது எப்படி என்று மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மும்பை, பிப்-20

மும்பை தொடர் வெடிகுண்டு விவகாரத்தில் நடிகர் சஞ்சய் தத் முன் கூட்டியே விடுவிக்கப்பட்டது எப்படி? அதற்குப் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் என்ன? என்ற விளக்கங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீண்ட காலமாக ஜெயிலில் இருக்கும் பேரறிவாளன், சிறை நிர்வாகத்திடம் கேட்டு இருந்தார்.
இதற்கான உரிய தகவல்களை பெற முடியாததால் பேரறிவாளன் தரப்பில் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த மும்பை ஐகோர்ட்டு, மகாராஷ்டிர தகவல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது எப்படி? என்றும் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் விவகாரத்தில் தமிழக அரசின் தீர்மானத்தை உள்துறைக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கவும் மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.