ரஜினியுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு..! தேர்தலில் ஆதரவு தர கோரிக்கை வைத்ததாக தகவல்
நடிகர் ரஜினிகாந்தை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். சட்டப் பேரவைத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவைப் பெறும் வகையில் கமல்ஹாசன் சந்தித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை, பிப்-20

சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி? எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது? போன்ற முக்கியமான அறிவிப்புகளை கமல் நாளை வெளியிடுவார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்தை மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.
போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்துக்கு சென்ற கமல்ஹாசன், ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. படப்பிடிப்பின்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்து கமல்ஹாசன் நலம் விசாரித்தார்.
ரஜினி கட்சி தொடங்காத நிலையில், அவரை சந்தித்து ஆதரவு கேட்பேன் என கமல்ஹாசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் ரஜினிகாந்துடன் அரசியல் குறித்து கமல்ஹாசன் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும், சட்டப் பேரவைத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவைப் பெறும் வகையில் கமல்ஹாசன் சந்தித்தாகவும் கூறப்படுகிறது.