சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு.. முதல்வர் அறிவிப்பு

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மெட்ரோ ரயிலில் அதிகபட்ச கட்டணமான 70 ரூபாயை ரூபாய் 50 ஆக குறைத்து பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

சென்னை, பிப்-20

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

சென்னையில் நாளை மறுநாள் முதல் மெட்ரோ ரெயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரெயிலில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயிலில் அதிகபட்ச கட்டணமான 70 ரூபாயை ரூ.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 5-12 கி.மீ. வரையிலான கட்டணமான 40 ரூபாயை ரூ.30 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2-5 கி.மீ. வரை கட்டணம் ரூ.20, 0-2 கி.மீ. வரையிலான கட்டணத்தில் மாற்றமில்லை.
க்யூ ஆர் கோடு, தொடுதல் இல்லா மதிப்பு கூட்டு பயண அட்டை மூலம் பயணித்தால் 20 சதவீத கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் வழித்தடத்திற்கும் சேர்த்து இனி 54 கி.மீ. 100 ரூபாயே வசூலிக்கப்படும். ஏற்கனவே வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் வழித்தடம் தவிர்த்து 45 கி.மீ.க்கு ரூ.100 வசூலிக்கப்பட்டு வந்தது.

ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் கட்டணத்திலிருந்து 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண குறைப்பு நாளை மறுநாள் திங்கள்கிழமை(பிப்.22) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *