காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்… கார்த்தி சிதம்பரம் பேச்சால் சலசலப்பு

பொய் சொல்வதை முதலில் நிறுத்துமாறு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சிவகங்கை தொகுதி எம்.பி, கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பரமக்குடி, பிப்-20

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேற்றிரவு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது;-

காங்கிரஸில் 70 லட்சம் உறுப்பினர்கள் உள்ளார்கள் என பொய்யாக அறிக்கை கொடுத்துவிட்டார்கள். இதை நம்பி 2016ஆம் ஆண்டு தேர்தலில் நான் நின்று விட்டேன். ஆனால் உறுப்பினர்களே நமக்கு (காங்கிரஸ்) ஓட்டு போடவில்லை. சராசரியாக ஒவ்வொரு பாராளுமன்றத்திற்கும் 30 ஆயிரம் வாக்குகள் தான் விழுந்தது. இதில் எப்படி 70 லட்சம் உறுப்பினர்கள் இருக்க முடியும். இதற்கு பொய்யாக சந்தா தொகை செலுத்தி பழைய பேப்பர்களை டெல்லிக்கு அனுப்பி விட்டார்கள். நம் நிர்வாகிகள் அங்கு டெல்லியில் இந்த பேப்பரை வைத்து பட்டாணி சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். ஆகையால் காங்கிரஸ் என்பது பெரிய பொய். முதல் ஸ்டெப் என்னவென்றால் காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்.

காங்கிரஸ் நிர்வாகிகள் தங்களுக்குள் பொய்சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். காங்கிரஸ்காரர்கள் மேடையும், மைக்கும் கிடைத்துவிட்டாலே காமராஜர் ஆட்சி அமைப்போம், இந்தியாவை வல்லரசாக ஆக்குவோம் எனப் பேச ஆரம்பித்துவிடுகின்றனர். இதெல்லாம் அவ்வளவு எளிதல்ல. மேடையில் என்ன பேசினாலும் நிர்வாகிகள் தங்களுக்குள் உண்மையாக இருக்க வேண்டும்.

முதல்படியாக நமக்குள் பொய் பேசுவதை நிறுத்த வேண்டும். எப்போது நிர்வாகிகளிடம் நான் பேசினாலும், எல்லா இடங்களிலும் பூத் கமிட்டி அமைத்தாகிவிட்டது,

அனைத்து பூத்களிலும் ஆள் இருக்கின்றனர் என்பார்கள். ஆனால், காங்கிரஸுக்கு ஓட்டே வராத பூத்கள் கூட இருக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு 70 லட்சம் உறுப்பினர்கள் எனப் பேசுவார்கள். அப்படியிருந்தால் நானே கூட முதல்வராகியிருக்கலாம். இதை நம்பி நானும் தேர்தலில் நின்றேன், ஆனால் எனக்கே யாரும் ஓட்டுப்போடவில்லை”

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *