தமிழக சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணி.. பிப். 25-ம் தேதி துணை ராணுவப்படை வருகை
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகின்றனர்.
சென்னை, பிப்-19

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகளை அரசியல் கட்சியல் இப்போதே தொடங்கி விட்டன. கூட்டணி பேச்சுவார்த்தைகள், கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவது, தேர்தல் பிரசாரம் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அரசியல் களத்தில் அரங்கேறி வருகிறது.
அதேசமயம், தேர்தலுக்காக ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையமும் தொடங்கியுள்ளது. அந்த வகையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு வரும் 25ந்தேதி துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகின்றனர். முதல்கட்டமாக தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 45 மத்திய பாதுகாப்பு படையினர் தமிழகம் வருகின்றனர்.