மருத்துவர்கள் நடவடிக்கை எடுப்பது கொடுங்கோன்மை-ஸ்டாலின்
சென்னை, அக்டோபர்-31
அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதை விடுத்துவிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கொங்கோன்மை என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் பலகட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் நலன் கருதி மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களின் பணியிடங்கள் காலியாக அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை அறிவித்தது.
இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின்: அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் போராட்டக் கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும்-அதிகாரிகளும், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள்வதுடன், பிரேக்-இன்-சர்வீஸ் &நன்னடத்தைச் சான்றிதழில் கைவைப்பது, பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகள் ஈடுபடுவது கொடுங்கோன்மை என்றும்,

மருத்துவர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தை காவல்துறை மூலம் ஒடுக்கிவிடலாம் என நினைக்காமல், நோயாளிகள் நிலை உணர்ந்து மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமையாகும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.