ஐபிஎல் ஏலம்; மொத்தம் 57 வீரர்கள், ரூ. 145.30 கோடி.. எந்த அணியில் யார்? முழு விவரம்
டெல்லி, பிப்-19

ஐபிஎல் சீசன் 2021-க்கான வீரர்கள் ஏலம் நடைபெற்றது. 292 வீரர்கள் ஏலம் விட தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் தென்ஆப்பிரிக்காவின் கிறிஸ் மோரிஸ் அதிகபட்சமாக 16.25 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது.
அதற்கு அடுத்தப்படியாக நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் 15 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது. அடுத்தப்படியாக மேக்ஸ்வெல் 14.25 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். இவரையும் ஆர்சிபி அணியே வாங்கியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியாவின் ஜய் ரிச்சர்ட்சன் 14 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. அதேபோல் ரிலே மெரிடித்தை 8 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகபட்சமாக கிருஷ்ணப்பாக கௌதமை 9.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கானை 5.25 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. சர்வதேச போட்டிகளில் விளையாடாத இந்திய வீரர்கள் இந்த இருவரும்தான் அதிக விளைக்குப் போனார்கள்.
ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ் முதல் சுற்றில் ஏலம் போகவில்லை. அதன்பின் அடிப்படை விலையில் எடுக்கப்பட்டார்கள். ஏலத்தின் கடைசி நபராக அர்ஜூன் தெண்டுல்கர் ஏலம் விடப்பட்டார். அவரை அடிப்படை விலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. அத்துடன் ஏலம் முடிவடைந்தது.
மொத்தம் 57 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டார்கள். இதில் 22 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். 8 அணிகளும் மொத்தம் 145 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளது.
சென்னை சூப்பா் கிங்ஸ்
கிருஷ்ணப்பா கௌதம் – ஆல் ரவுண்டா் – ரூ.9.25 கோடி
மொயீன் அலி – ஆல் ரவுண்டா் – ரூ.7 கோடி
சேதேஷ்வா் புஜாரா – பேட்ஸ்மேன் – ரூ.50 லட்சம்
கே.பகத் வா்மா – ஆல் ரவுண்டா் – ரூ.20 லட்சம்
சி.ஹரி நிஷாந்த் – பேட்ஸ்மேன் – ரூ.20 லட்சம்
எம்.ஹரிசங்கா் ரெட்டி – பௌலா் – ரூ.20 லட்சம்
கையிருப்பு: ரூ.2.55 கோடி
டெல்லி கேப்பிட்டல்ஸ்
டாம் கரன் – ஆல் ரவுண்டா் – ரூ.5.25 கோடி
ஸ்டீவன் ஸ்மித் – பேட்ஸ்மேன் – ரூ.2.20 கோடி
சாம் பில்லிங்ஸ் – விக்கெட் கீப்பா் – ரூ.2 கோடி
உமேஷ் யாதவ் – பௌலா் – ரூ.1 கோடி
ரிபல் படேல் – ஆல் ரவுண்டா் – ரூ.20 லட்சம்
விஷ்ணு வினோத் – விக்கெட் கீப்பா் – ரூ.20 லட்சம்
லுக்மன் ஹுசைன் மேரிவாலா – பௌலா் – ரூ.20 லட்சம்
எம்.சித்தாா்த் – பௌலா் – ரூ.20 லட்சம்
கையிருப்பு: ரூ.2.15 கோடி
கொல்கத்தா நைட் ரைடா்ஸ்
ஷகிப் அல் ஹசன் – ஆல் ரவுண்டா் – ரூ.3.20 கோடி
ஹா்பஜன் சிங் – பௌலா் – ரூ.2 கோடி
பென் கட்டிங் – ஆல் ரவுண்டா் – ரூ.75 லட்சம்
கருண் நாயா் – பேட்ஸ்மேன் – ரூ.50 லட்சம்
பவன் நெகி – ஆல் ரவுண்டா் – ரூ.50 லட்சம்
வெங்கடேஷ் ஐயா் – ஆல் ரவுண்டா் – ரூ.20 லட்சம்
ஷல்டன் ஜேக்சன் – விக்கெட் கீப்பா் – ரூ.20 லட்சம்
வைபவ் அரோரா – பௌலா் – ரூ.20 லட்சம்
கையிருப்பு: ரூ.3.20 கோடி
மும்பை இண்டியன்ஸ்
நாதன் கோல்டா் நீல் – பௌலா் – ரூ.5 கோடி
ஆடம் மில்னே – பௌலா் – ரூ.3.20 கோடி
பியூஷ் சாவ்லா – பௌலா் – ரூ.2.40 கோடி
ஜேம்ஸ் நீஷம் – ஆல் ரவுண்டா் – ரூ.50 லட்சம்
யுத்வீா் சாரக் – ஆல் ரவுண்டா் – ரூ.20 லட்சம்
மாா்கோ ஜேன்சன் – ஆல் ரவுண்டா் – ரூ.20 லட்சம்
அா்ஜுன் டெண்டுல்கா் – ரூ.20 லட்சம்
கையிருப்பு: ரூ.3.65 கோடி
பஞ்சாப் கிங்ஸ்
ஜை ரிச்சா்ட்சன் – பௌலா் – ரூ.14 கோடி
ரிலே மெரிடித் – பௌலா் – ரூ.8 கோடி
ஷாருக் கான் – ஆல் ரவுண்டா் – ரூ.5.25 கோடி
மொய்சஸ் ஹென்ரிக்ஸ் – ஆல் ரவுண்டா் – ரூ.4.20 கோடி
டேவிட் மலான் – ஆல் ரவுண்டா் – ரூ.1.50 கோடி
ஃபாபியான் ஆலன் – ஆல் ரவுண்டா் – ரூ.75 லட்சம்
ஜலஜ் சக்ஸேனா – ஆல் ரவுண்டா் – ரூ.30 லட்சம்
சௌரவ் குமாா் – ஆல் ரவுண்டா் – ரூ.20 லட்சம்
உத்கா்ஷ் சிங் – ஆல் ரவுண்டா் – ரூ.20 லட்சம்
கையிருப்பு: ரூ.18.80 கோடி
சன்ரைசா்ஸ் ஹைதராபாத்
கேதாா் ஜாதா் – ஆல் ரவுண்டா் – ரூ.2 கோடி
முஜீப் ஸா்தான் – பௌலா் – ரூ.1.50 கோடி
ஜெ.சுசித் – பௌலா் – ரூ.30 லட்சம்
கையிருப்பு: ரூ.6.95 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ்
கிறிஸ்டோபா் மோரிஸ் – ஆல் ரவுண்டா் – ரூ.16.25 கோடி
ஷிவம் துபே – ஆல் ரவுண்டா் – ரூ.4.40 கோடி
சேத்தன் சகாரியா – பௌலா் – ரூ.1.20 கோடி
முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் – பௌலா் – ரூ.1 கோடி
லியாம் லிவிங்ஸ்டன் – ஆல் ரவுண்டா் – ரூ.75 லட்சம்
கே.சி.கரியப்பா – பௌலா் – ரூ.20 லட்சம்
ஆகாஷ் சிங்- பௌலா் – ரூ.20 லட்சம்
குல்தீப் யாதவ் – பௌலா் – ரூ.20 லட்சம்
கையிருப்பு: ரூ.13.65 கோடி
ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்
கைல் ஜேமிசன் – ஆல் ரவுண்டா் – ரூ.15 கோடி
கிளென் மேக்ஸ்வெல் – ஆல் ரவுண்டா் – ரூ.14.25 கோடி
டேன் கிறிஸ்டியன் – ஆல் ரவுண்டா் – ரூ.4.80 கோடி
சச்சின் பேபி – பேட்ஸ்மேன் – ரூ.20 லட்சம்
ரஜத் பட்டிதாா் – பேட்ஸ்மேன் – ரூ.20 லட்சம்
முகமது அஸாருதீன் – விக்கெட் கீப்பா் – ரூ.20 லட்சம்
சுயாஷ் பிரபுதேசாய் – ஆல் ரவுண்டா் – ரூ.20 லட்சம்
கோனா ஸ்ரீகா் பரத் – விக்கெட் கீப்பா் – ரூ.20 லட்சம்
கையிருப்பு: ரூ.35 லட்சம்