புதுச்சேரி சரித்திரத்தில் தமிழில் உறுதிமொழி வாசித்து ஆளுநராக பொறுப்பேற்றது மகிழ்ச்சி.. தமிழிசை

புதுச்சேரி, பிப்-18

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் வரிசையில் 31-வது ஆளுநராக தமிழிசை பொறுப்பு ஏற்றார். இதுவரை யாரும் தமிழில் உறுதிமொழி வாசித்து பொறுப்பு ஏற்றதில்லை. முதலாவதாக தமிழில் உறுதிமொழி வாசித்து தமிழிசை பொறுப்பு ஏற்றுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு தமிழிசை அளித்த பேட்டி பின்வருமாறு ;-

“மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றுள்ளேன். தமிழில் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. தமிழில் உறுதிமொழி ஏற்கவேண்டும் என்று கேட்டபோது புதுவை சரித்திரத்தில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, தமிழில் உரை தயாரித்து பொறுப்பேற்றது மகிழ்ச்சி” என்றார்.

பொறுப்பேற்றவுடன் இட்ட முதல் கையெழுத்து தொடர்பாக கூறுகையில், “நான் முதலில் கையெழுத்து போடுவது சாமானிய மக்களுக்கான கையெழுத்தாக இருக்க வேண்டும் என எண்ணினேன். அதனால்தான் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் கையெழுத்தை இட்டேன். இந்த கையெழுத்து நிச்சயமாக புதுவை மக்களின் தலையெழுத்தை மாற்றும் என நான் நம்புகிறேன். அடுத்து எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கான உதவித்தொகை வழங்கும் கையெழுத்தாக இருந்தது” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *