சட்டசபை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 54 உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம்

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழகம் முழுவதும் 54 போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, பிப்-18

இது குறித்து உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது ;-

1. பொருளாதார குற்றத்தடுப்புப்பிரிவு ஐஜி கணேசமூர்த்தி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

2. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி அன்பு நெல்லை காவல் ஆணையராக மாற்றப்பட்டார்.

3. நெல்லை காவல் ஆணையர் தீபக் தாமோர் சென்னை சீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

4. சீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி வித்யா ஜெயந்த் குல்கர்னி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

5. சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தேன்மொழி சென்னை சிபிசிஐடி ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

6. சிபிசிஐடி ஐஜி ஷங்கர் வடக்கு மண்டல ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

7. சென்னை ஐஜி(பொது) பவானீஸ்வரி சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

8. சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன் சென்னை சட்டம் ஒழுங்கு (தெற்கு) கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

9. சென்னை சட்டம் ஒழுங்கு (தெற்கு) கூடுதல் ஆணையர் தினகரன் மேற்கு மண்டல ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

10. மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா சென்னை ஐஜி (பொது) யாக மாற்றப்பட்டுள்ளார்.

11. சென்னை நிர்வாகப்பிரிவு ஐஜி சந்தோஷ்குமார் சேலம் காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

12. சேலம் காவல் ஆணையர் செந்தில்குமார் சென்னை(வடக்கு) கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

13. சென்னை(வடக்கு) கூடுதல் ஆணையர் அருண் சென்னை நிர்வாக ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

14.சென்னை ஆயுதப்படை டிஐஜி ராஜேஷ்வரி சென்னை மேற்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

15. சென்னை மேற்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் மகேஷ்வரி சென்னை தலைமையிட டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

16. சென்னை தலைமையிட டிஐஜி செந்தில்குமாரி போக்குவரத்து காவல் (தெற்கு) இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

17. போக்குவரத்து காவல் (தெற்கு) இணை ஆணையர் லட்சுமி சென்னை தெற்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

18. சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் ஏ.ஜி.பாபு சென்னை தலைமையிட டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

19. சென்னை தலைமையிட டிஐஜி துரைகுமார் சென்னை சட்டம் ஒழுங்கு (வடக்கு) இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

20. சென்னை சட்டம் ஒழுங்கு (வடக்கு) இணை ஆணையர் பாலகிருஷ்ணன் சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

21. சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர் மதுரை சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

22. மதுரை சரக டிஐஜி ராஜேந்திரன் இண்டெலிஜென்ஸ் (உள் பாதுகாப்பு) டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

23. சென்னை போக்குவரத்து வடக்கு மண்டல இணை ஆணையர் பாண்டியன் விழுப்புரம் சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

24.விழுப்புரம் சரக டிஐஜி எஜிலிராசனே சென்னை போக்குவரத்து வடக்கு இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

25. சென்னை போக்குவரத்து வடக்கு துணை ஆணையர் கிருஷ்ணராஜ் நெல்லை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

26.நெல்லை எஸ்பி மணிவண்ணன் தூத்துக்குடி எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

27. தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் தமிழ்நாடு சிறப்புக்காவல்படை பூந்தமல்லி 8-வது பட்டாலியன் கமாண்டண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

28. தமிழ்நாடு சிறப்புக்காவல்படை பூந்தமல்லி 8-வது பட்டாலியன் கமாண்டண்ட் பாஸ்கரன் அரியலூர் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

29. அரியலூர் எஸ்.பி வி.ஸ்ரீனிவாசன் நெல்லை சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

30. நெல்லை துணை ஆணையர் சரவணன் தூத்துக்குடி காவலர் தேர்வுப்பள்ளி முதல்வராக மாற்றப்பட்டுள்ளார்.

31. தூத்துக்குடி காவலர் தேர்வுப்பள்ளி முதல்வர் ராமகிருஷ்ணன் சென்னை நீதிமன்ற வழக்குகளை கையாளும் ஏஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

32. ராணிப்பேட்டை எஸ்.பி மயில்வாகனன் கோவை தலைமையிட துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

33. கோவை தலைமையிட துணை ஆணையர் குணசேகரன் சேலம் மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

34. சேலம் மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பி சிவகுமார் ராணிப்பேட்டை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

35. வணிகக்குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்.பி பாண்டியராஜன் நீலகிரி எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

36. நீலகிரி எஸ்.பி. சசிமோகன் கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

37. கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அதிவீரபாண்டியன் சென்னை காவல் ஆணையரக தலைமையிட துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

38. சென்னை காவல் ஆணையரக தலைமையிட துணை ஆணையர் டி.கே.ராஜசேகரன் மதுரை நகர குற்றப்பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

39. மதுரை நகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பழனிகுமார் சென்னை ரயில்வே துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

40. சென்னை ரயில்வே துணை ஆணையர் ராஜன் திருச்சி எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

41. திருச்சி எஸ்.பி ஜெயச்சந்திரன் மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

42. மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பி ராஜராஜன் சிவகங்கை எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

43. சிவகங்கை எஸ்.பி ரோஹித் நாதன் ராஜகோபால் சென்னை ஆவின் விஜிலென்ஸ் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

44. சென்னை செக்யூரிட்டி பிரிவு துணை ஆணையர் அஷோக்குமார் கடலோர காவல்படை எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

45. கடலோர காவல்படை எஸ்.பி மகேஸ்வரன் கரூர் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

46. கரூர் எஸ்.பி பகலவன் திருவல்லிக்கேணி துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

47. கியூ பிராஞ்ச் எஸ்.பி மஹேஷ் அம்பத்தூர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

48. அம்பத்தூர் துணை ஆணையர் தீபா சத்யன் சென்னை போக்குவரத்து (தெற்கு) துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

49. சென்னை போக்குவரத்து (தெற்கு) துணை ஆணையர் என்.குமார் சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

50. சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பி வந்திதா பாண்டே சென்னை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

51. சென்னை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.பி மீனா சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் -2 ஆக மாற்றப்பட்டுள்ளார்.

52. சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் -2 கண்ணம்மாள் சென்னை கியூ பிராஞ்ச் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

53. மாமல்லபுரம் சப் டிவிஷன் கூடுதல் எஸ்.பி சுந்தரவதனம் எஸ்.பியாக பதை உயர்த்தப்பட்டு சென்னை போக்குவரத்து (வடக்கு) துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

54. தமிழ்நாடு காவலர் அகாடமி ஏஎஸ்பி சங்கரன் எஸ்.பியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை செக்யூரிட்டிப்பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

மேற்கண்ட இட மாறுதல்களை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *