பஞ்சாபில் உள்ளாட்சி தேர்தல்.. 7 மாநகராட்சிகளை கைப்பற்றியது, காங்கிரஸ்

பஞ்சாபில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தோ்லில், 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

சண்டிகர், பிப்-18

பஞ்சாபில் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த 14-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.8 மாநகராட்சிகளிலும், 109 நகராட்சிகளிலும் தேர்தல் நடந்தது. இதில், காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை போட்டியிட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பிரிந்த பாஜகவும், சிரோமணி அகாலி தளமும் தனித்தனியே களமிறங்கின. தோ்தலில் பதிவான வாக்குகள், புதன்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், பதிண்டா, கபூர்தலா, ஹோசியார்பூர், பதான்கோட், படாலா, மொகா, அபோஹர் ஆகிய 7 மாநகராட்சிகளிலும் பெரும்பான்மை வார்டுகளில் ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதன மூலம் 7 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது.

நேற்று மாலை நிலவரப்படி, மொத்தம் உள்ள 350 மாநகராட்சி வார்டுகளில் 281 வார்டுகளையும், 1,815 நகராட்சி வார்டுகளில் 1,199 வார்டுகளையும் காங்கிரஸ் கைப்பற்றியது.

அகாலிதளம், 33 மாநகராட்சி வார்டுகளையும், 289 நகராட்சி வார்டுகளையும் கைப்பற்றியது. பா.ஜனதா 20 மாநகராட்சி வார்டுகளிலும், 38 நகராட்சி வார்டுகளிலும் வெற்றி பெற்றது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மாநகராட்சிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தோ்தல் வெற்றியால் காங்கிரஸ் கட்சியினா் உற்சாகம் அடைந்துள்ளனா்.

மொகாலி மாநகராட்சியில் பதிவான வாக்குகள், இன்று (வியாழக்கிழமை) எண்ணப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *