அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு!!!!

சென்னை, அக்டோபர்-31

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வெற்றிபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்க உள்ளனர்.

கடந்த 21-ம் தேதி விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் முத்தமிழச்செல்வன், ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து இருவரும் வாழ்த்து பெற்றனர். கடந்த 29-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெற இருந்த நிலையில், அன்றைய தினம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க போராட்டம் நடைபெற்று வந்ததால் பதவியேற்பு விழா ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருவரும் சென்னை தலைமை செயலகத்தில் நாளை பதவியேற்க உள்ளனர். அவருக்கு சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழாவில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் கலந்துகொள்ள உள்ளனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *