கேரளாவிலிருந்து வந்தால் கொரோனா சான்று கட்டாயம்: கர்நாடக அரசு அறிவிப்பு
கேரளாவில் இருந்து வரும் நபர்கள் கொரோனா பரிசோனையில் நெகட்டிவ் முடிவு வந்துள்ளதற்கான சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம் என கர்நாடக மாநிலம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம், பிப்-16

இந்தியாவிலேயே தற்போது கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில்தான் தினந்தோறும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை இந்த இரண்டு மாநிலங்களில் அதிகமாக இருக்கும் நிலையில், கேரளாவில் இருந்து வரும் நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம். மேலும், இந்த பரிசோதனை சான்றிதழ் 72 மணி நேரத்திற்கு முன்னதாக இருக்கக் கூடாது என் கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா தடுப்பூசி இல்லாமல் வெளிநாட்டில் இருந்து கர்நாடகா வரும் பயணிகளும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.