பிப். 23-ல் தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்

பிப்.23-ல் சட்டப்பேரவைக் கூட்டம் நடக்க உள்ளதை அடுத்து இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.

சென்னை, பிப்-16

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கவர்னர் உரையாற்றினார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உறுப்பினர்கள் பேசினார்கள். 5-ந் தேதி சபை ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில் தமிழக சட்டசபை மீண்டும் கூட உள்ளது. இதுதொடர்பாக சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

“தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் பிப்ரவரி 23-ம் நாள் செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு சென்னை வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், கலைவாணர் அரங்கம் மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்ட அரங்கத்தில் நடைபெறும் என்று கூட்டப் பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார். மேலும், பிப்ரவரி 23-ம் நாள் செவ்வாய்க்கிழமை 2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்படும்”.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *