பட்டேலின் கனவு நனவாகியுள்ளது-அமித்ஷா பெருமிதம்

புதுடெல்லி, அக்டோபர்-31

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, 35ஏ பிரிவை நீக்கியதன் மூலம் தீவிரவாதத்தின் நுழைவு வாயிலைப் பிரதமர் மோடி மூடியுள்ளார். படேலின் கனவு நனவாகியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதமாக தெரிவித்தார்.

சர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் ஒற்றுமைக்கான ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த ஓட்டத்தை உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித்ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: ஜம்மு காஷ்மீரை தேசத்தோடு ஒருங்கிணைக்க வேண்டும் எனும் சர்தார் வல்லபாய் படேலின் கனவு நிறைவடையாமல் இருந்து வந்தது. ஆனால், அரசியலமைப்பு 370, 35ஏ பிரிவுகளை நீக்கியபின் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பட்டேலின் கனவு நிறைவேறியது. சட்டப்பிரிவுகளை நீக்கி பிரதமர் மோடி தீவிரவாதத்தின் கதவுகளை மூடியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் மக்கள் அளித்த மிகப்பெரிய ஆதரவுக்குப் பின், 370 பிரிவு, 35ஏ பிரிவுகள் நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இந்திய வரைபடம் ஒருங்கிணைந்து இருப்பதை இன்று பார்க்கிறோம். அதற்கு முக்கியக் காரணம் சர்தார் வல்லபாய் படேல்தான். 550க்கும் மேற்பட்ட சிற்றரசுகளை ஒருங்கிணைத்து இந்திய தேசமாக மாற்றினார். இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *