ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநராக முர்மு பதவியேற்பு!!

ஸ்ரீநகர், அக்டோபர்-31

புதிதாக உருவாகிய சட்டப்பேரவையுடன் கூடிய ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் துணைநிலை ஆளுநராக கிரிஷ் சந்திர முர்மு பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கீதா மிட்டல், முர்முவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நீக்கி, அரசியலமைப்பின் 370-வது பிரிவையும் திரும்பப் பெற்றது. ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு பகுதிகளையும் யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்தது.

இதில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை அல்லாத யூனியன் பிரதேசமாகவும் இருக்கும். இரு யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக ஆர்.கே.மாத்தூர் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடந்த 1985-ம் ஆண்டு குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரி முர்மு என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *