தேச பக்தர்களுக்கும், தேச விரோதிகளுக்கும் இடையேயான தேர்தல்… திமுகவை வெளுத்த எல்.முருகன்

கோவை, பிப்-16

கோவையில் இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசுகையில்;-

இந்து, தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக திமுக, கம்யூனிஸ்ட்கள் செயல்படுகின்றன. பிரதமரையும், இந்துகடவுள்களையும் கொச்சைப்படுத்துபவர்கள் மீது புகார்அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது திமுக-காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கமும் அவர்கள் ஆட்சியில்தான் நடைபெற்றது. காங்கிரஸ் ஆட்சியில் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது வேடிக்கை பார்த்தது திமுக. எனவே, திமுக, திகவின் பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டும். வெற்றிவேல் யாத்திரைக்குக் கிடைத்த ஆதரவு, ஸ்டாலினை வேல் ஏந்த வைத்திருக்கிறது. எனவே, தேர்தலுக்காக வேஷம்போட்டுள்ளவர்களின் போலி முகத்தை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தேச பக்தர்களுக்கும், தேச விரோதிகளுக்கும் இடையேயான தேர்தல். இதில் தேச பக்தர்கள் வெல்ல வேண்டும்

என எல்.முருகன் பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *