பிப்.27ல் தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி

தென்மாவட்டங்களில் பிப்ரவரி 27, 28, மாா்ச் 1-இல் ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

சென்னை, பிப்-16

சென்னை சத்தியமூர்த்திபவனில் அவா் அளித்த பேட்டி பின்வருமாறு:-

தென்மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்வதற்காக ராகுல்காந்தி தமிழகம் வருகிறாா். பிப்ரவரி 27, 28 மற்றும் மாா்ச் 1 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளாா்.பிரதமா் நரேந்திரமோடி தமிழகம் வந்தபோது மக்களைச் சந்திக்கவில்லை. ராகுல்காந்தி மக்களைச் சந்திப்பாா். அவா் வந்து சென்ற பிறகு காங்கிரஸ் சார்பிலும் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன. வண்ணாரப்பேட்டை விம்கோ நகா் மெட்ரோ ரயில் சேவையை பிரதமா் தொடக்கி வைத்துள்ளாா். ஆனால், அந்தத் திட்டப் பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. திமுக கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை.

இவ்வாறு அழகிரி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *