திமுக சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்ப மனு

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வரும் 17ம் தேதி முதல் 24-ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார்.

சென்னை, பிப்-16

தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளதால் திமுக, அதிமுக உள்பட அனைத்துக்கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. கூட்டணி அமைப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நடைபெறவிருக்கும் தமிழ்நாடு-புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் 17-02-2021 புதன்கிழமை முதல் 24-02-2021 புதன்கிழமை வரை தலைமைக்கழகத்தில் விண்ணப்பித்திட வேண்டுகிறேன்.

தமிழ்நாடு-புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம்:
பொதுத்தொகுதி- ரூ.25,000
மகளிர்க்கும் மற்றும் தனித்தொகுதிக்கும்- ரூ.15,000

வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணியின் தோழைமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் பின்னர் திரும்பித் தரப்படும். விண்ணப்படிவம் தலைமைக்கழகத்தில் ரூ.1000 வீதம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *