இந்தியாவில் சதம் அடித்த பெட்ரோல் விலை.. கொதிப்படைந்த வாகன ஓட்டிகள்

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பெட்ரோல் விலை உச்சத்தை தொட்டுள்ளது. தற்போது இந்தியாவில் பெட்ரோலின் விலை சதம் அடித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் கவலைக்கு உள்ளாகியுள்ளனர்.

டெல்லி, பிப்-15

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வந்தது. மேலும் கடந்த 1ம் தேதி அன்று மத்திய பொது பட்ஜெட் தாக்கலில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கூடுதல் விதியை விதித்தனர். இதனால் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். தற்போது அதுபோலவே விலை அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் பெட்ரோல் விலை 100 ஐ தாண்டியுள்ளது.

மேலும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு நாட்டிலையே அதிக வரியை விதிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.99.29 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மராட்டிய மாநிலத்தின் பர்பானில் ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ரூ.100.16 ஆக விற்பனை செய்யப்படுகிது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் வேதனைக்குள்ளாகினர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை பெட்ரோல் லிட்டர் ரூ.91.19 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.90.96 காசுகளாகவும், டீசல் ரூ.84.16 காசுகளாகவும், இருந்தது. இன்று அதன் விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.91.19-க்கும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ.84.16-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கொதிப்படைந்துள்ளனர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் பெட்ரோலின் விலை 93 ரூபாயை தாண்டியுள்ளது.

நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று மேலும் 23 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93. 42க்கு விற்பனையாகிறது. இதே போன்று டீசல் லிட்டருக்கு 38 காசுகள் அதிகரித்து 86.33 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி பெட்ரோலுக்கு 61 சதவீதம் மற்றும் டீசலுக்கு 56 சதவீதம் வரியை மத்திய மாநில அரசுகள் விதித்தது. மேலும் கொரோனா காலத்திற்கு பின்பு பெட்ரோல் விலை 19 ரூபாய் 16 காசுகள் உயர்நதுள்ளது. மேலும் டீசல் விலை 16 ரூபாய் 77 காசுகள் உயர்ந்துள்ளது. மேலும் ஒரு வருடத்திற்கு பிறகு கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 61 டாலரை எட்டியுள்ளது. இதுவே பெட்ரோல் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்று கூறுகின்றனர். அதேபோல் தற்போதைய நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைவதற்கு வாய்ப்பு இல்லாதது போல் தான் தெரிகிறது. மேலும் இன்னும் சில தினங்களில் தமிழகத்திலும் பெட்ரோல் விலை சதமடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *