கோவையில் 73 வகை சீர்வரிசை பொருட்களுடன் 123 ஜோடிகளுக்கு திருமணம்.. ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் நடத்தி வைத்தனர்,

கோவையில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இன்று 123 ஜோடிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திருமணம் நடத்தி வைத்தனர்.

கோவை, பிப்-15

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள்
வரும் 24ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கோவை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் ஏழை பெண்களுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைப்பது வழக்கம். அதன்படி 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தார். அதன்படி கோவை-சிறுவாணி ரோடு பேரூர் செட்டிப்பாளையத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று 123 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமை வகிக்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர். இதில் திருமண ஜோடிகளின் உறவினர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.

திருமண ஜோடிகளுக்கு கட்டில், பீரோ, மெத்தை, சூட்கேஸ், கியாஸ் ஸ்டவ், சில்வர் குடம், குக்கர் உள்பட 73 வகையான சீர்வரிசை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

திருமணம் முடிந்ததும் கோவை அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓய்வு எடுக்கிறார். பின்னர் அவர், கொடிசியாவில் கிறிஸ்தவ ஜனநாயக சங்கம் சார்பில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்கிறார்.இதையடுத்து அவர், நாமக்கல்லில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை செல்வதற்காக இரவு 9.30 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *