வடக்கே வன்னியர்கள் தெற்கே தேவேந்திரர்கள்… மோடியை பாராட்டி டவீட் செய்த ராமதாஸ்..!

சென்னை, பிப்-15

தமிழகம் வந்த பிரதமர் மோடி, 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்கள் தேவேந்திர குல வேளாளர் என இனி அழைக்கப்படுவர் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில்;-

பள்ளர், குடும்பன், காலாடி உள்ளிட்ட 7 சமுதாயங்களை #தேவேந்திரகுலவேளாளர் என்று அழைப்பதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்திருப்பது குறித்தும், தேவேந்திர குல வேளாளர் சமுதாய பண்பாடு குறித்தும் சென்னை விழாவில் பிரதமர் மோடி 10 நிமிடங்கள் பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் உரிமைகள், பெருமைகள் குறித்து எவரும் பேசுவதற்கு முன்பே நான் பேசியதும், வடக்கே வன்னியர்கள், தெற்கே தேவேந்திரர்கள் என்ற முழக்கத்துடன் 05.03.1989-இல் மதுரை தமுக்கம் திடலில் #ஒருதாய்மக்கள் மாநாட்டை நான் நடத்தியதும் என் மனதில் நிழலாடுகின்றன என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *