பாகிஸ்தான்: ரயிலில் பயங்கர தீ, 65 பேர் பலி…

பாகிஸ்தான், அக்டோபர்-31

பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் கேஸ் ஸ்டவ் வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இதுவரை 65 பேர் வரை பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு சென்று கொண்டிருந்த தேஸ்காம் விரைவு ரயிலில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஓடும் ரயிலில் சிலர், கேஸ் ஸ்டவ் அடுப்புகளை பற்ற வைத்து உணவு தயாரித்துள்ளனர்.

இதில், 2 கேஸ் ஸ்டவ் அடுப்புகள் பயங்கரச் சத்தத்துடன் வெடித்து சிதறின. அடுத்தடுத்த ரயில் பெட்டிகளுக்கும் தீ மளமளவென பரவியது. இந்த கோர விபத்தில் தற்போது வரை 65 பேர் பலியாகியுள்ளதாகவும், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *