பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு திடீரென எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் செய்த ஓவியா!

பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ஓவியா ட்வீட் வெளியிட்டுள்ளார்.

சென்னை, பிப்-13

தமிழகத்தில் ரூ.4,486 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி நாளை தொடக்கி வைக்கிறாா். மேலும், ரூ.3, 640 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அவா் அடிக்கல் நாட்டுகிறாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நாளை (பிப்-14) நடைபெறுகிறது.

மோடி செல்லும் இடங்களில் அவரை வரவேற்கும் விதமாக welcome modi எனும் பதிவும், அதை எதிர்க்கும் விதமாக gobackmodi என்ற ஹேஷ்டேக்கும் அதிகமாகப் பதிவிடப்படும். இந்நிலையில் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோ பேக் மோடி என்கிற ஹேஷ்டேக்குடன் நடிகை ஓவியா ட்வீட் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

பிக் பாஸ் முதல் சீஸனில் பங்கேற்ற நடிகை ஓவியா, ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்தார். இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக ஹேஷ்டேக் பதிவிட்ட ஓவியாவுக்கு வரவேற்பும், எதிர்ப்பும் கலந்து வந்து கொண்டிருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *