இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்.. தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது..!

இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசிக்க தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

சென்னை, பிப்-13

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று சென்னை கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. அ.தி.மு.க.வின் 5 ஆண்டு கால ஆட்சி வருகிற மே மாதம் நிறைவடைய உள்ளதால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்தான் வருகிற சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்ய முடியும்.

சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் இப்போது தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறக்கூடும் என தெரிகிறது.
இந்த 6 மாத கால இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய அம்சங்களை இடம்பெற செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்க அமைச்சரவை கூட்டம் கூட்டப்படுகிறது.

இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில், பல்வேறு சலுகைகள், பெண்களை கவரும் வகையில் பல அறிவிப்புகள், மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன் ரத்து, விலையில்லா டேப்லெட் பிசி, ஸ்மார்ட் போன் உள்பட பல திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *