காழ்ப்புணர்ச்சியுடன் ஸ்டாலின் பேசுவது வருத்தமளிக்கிறது-EPS
சேலம், அக்டோபர்-31
சேலம் மாவட்டம் ஓமலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குழந்தை சுர்ஜித்தை உயிருடன் மீட்கமுடியாதது வேதனைக்குரியது. சுர்ஜித் விவகாரத்தில் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஸ்டாலின் குறை கூறி வருகிறார்.
பணிக்கு வர மறுக்கும் மருத்துவர்களை தமிழக அரசு வேடிக்கை பார்த்துகொண்டு இருக்காது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் அமைச்சர் அறிவித்தப்படி பணிக்கு திரும்பாத மருத்துவர்களின் பணியிடங்கள் காலியிடமாக அறிவிக்கப்படும்.
ஒரு மருத்துவரை உருவாக்க தமிழக அரசு மக்களின் வரிப்பணத்தில் இருந்து ரூ.1.24 கோடி செலவிடுகிறது. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே அங்கீகரிக்கப்படாத மருத்துவர் சங்கம் போராட்டத்தில் ஈடுபடுகிறது என தெரிவித்தார். மேலும், வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு சாதகமான சட்டம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.