கமலுடன் கூட்டணி சேர்ந்து 3வது அணியா?.. தெறித்து ஓடிய வைகோ..!

நெல்லை, பிப்-13

நெல்லை பாளையங்கோட்டையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். தி.மு.க. கூட்டணிக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் திரளான மக்களை சந்தித்து ஆதரவை திரட்டி வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்களிடையே எழுச்சி உண்டாகிறது. அ.தி.மு.க. அரசின் மீது மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். நடிகர் கமல்ஹாசன் 3-வது அணி அமைப்பதால், தி.மு.க. கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி. கமல்ஹாசனுடன் கூட்டணி என்ற யூகத்திற்கு பதில் அளிக்க விரும்பவில்லை. தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் நடத்தவில்லை. தி.மு.க. கூட்டணி வெற்றிக்காக விரைவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம். ம.தி.மு.க.வில் வாரிசு அரசியல் கிடையாது. தி.மு.க.வில் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வெளியில் வந்துள்ள சசிகலாவால், தமிழக அரசியலில் எந்த தாக்கமும் ஒருபோதும் ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *