சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்.. பிரதமர் அறிவிப்பு

டெல்லி, பிப்-12

விருதுநகர் மாவ்டடம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும், விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு நேரிட்டது மிகுந்த வேதனையை அளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டுகிறேன் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *