ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுக்கக்கூடாது-அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்

சென்னை, அக்டோபர்-31

வடகிழக்கு பருவ மழை தீவிரமாகிவரும் நிலையில் அரபிக்கடலில் கியார், மஹா என இரு புயல்கள் மையம் கொண்டுள்ளன. மஹா புயல் லட்சத்தீவு, மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மஹா புயலால், குமரிமுனை, மாலத்தீவு ஆகிய கடற் பகுதிகளில் அடுத்த ஆறு மணி நேரத்திற்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். 

கன்னியாகுமரி தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பாத 8 படகுகளில் உள்ள மீனவர்களுக்கு மத்திய உள்துறை மூலம் தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மழை பெய்தவுடன், அரசு உத்தரவுக்கு காத்திருக்காமல், உடனடியாக முடிவெடுத்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். அரசு மேற்கொள்ளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்குமாறும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். மக்கள் நீர் தேங்கும் இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக செல்ஃபி எடுப்பதால் பெரும் விபத்துக்கள் நிகழ்கின்றன. ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுக்ககூடாது. என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *