விஜயகாந்த் உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன்.. பிரேமலதா தடாலடி!

விஜயகாந்த் உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் நிச்சயம் பங்கேற்பார் என்றும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

சென்னை, பிப்-12

தேமுதிகவின் கொடி நாளை முன்னிட்டு அக்கட்சியின் அலுவலகத்தில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றினார். பின்னர், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயாகாந்த் ஆகியோர் பரப்புரை வாகனத்தில் இருந்தபடியே மக்களை சந்தித்தனர். அப்போது விஜயகாந்த் மக்களை பார்த்து கையசைத்தார். அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவர் தனது பெண் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு விஜயகாந்திடம் கூறினார். உடனே தனது பெயரையும் மனைவி பிரேமலதா பெயரையும் இணைத்து ‘விஜயலதா’ என அக்குழந்தைக்கு பெயர் சூட்டினார் விஜயகாந்த்.

இதைத் தொடர்ந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது;-

கூட்டணி குறித்து யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தனித்து போட்டியிட்டால் 234 தொகுதிகளிலும் தேமுதிக வெற்றி பெறும்.கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் அறிவிப்பதை தொண்டர்கள் ஏற்பார்கள். தேர்தல் தேதி அறிவித்ததும் செயற்குழு பொதுக்குழுவில் கூட்டப்படும். தேமுதிக செயற்குழு, பொதுக்குழுவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த் நிச்சயம் பங்கேற்பார். இன்னும் எந்த கட்சியும் கூட்டணி குறித்து பேசத் தொடங்கவில்லை. தேர்தலுக்கு 2 மாதங்களே உள்ளதால் கூட்டணிப் பேச்சை திமுகவும் அதிமுகவும் விரைந்து தொடங்க வேண்டும். கூட்டணி பற்றி இனி தேமுதிகவிடம் கேட்காதீர்கள், அதிமுகவிடம் கேளுங்கள்.தொலைக்காட்சி விவாதங்களில் தேமுதிக நிர்வாகிகள் இனி கலந்து கொள்வர்.சசிகலாவை சந்திக்க போகிறேன் என்று வெளியான செய்தியில் உண்மையில்லை.விஜயகாந்த், தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நான் தேர்தலில் போட்டியிடுவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *