நாம் இருவர், நமக்கு இருவர் என்ற பாணியில் நாட்டை 4 பேர் ஆட்சி செய்கின்றனர்.. மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு

நாம் இருவர், நமக்கு இருவர் என்ற பாணியில் நாட்டை 4 பேர் ஆட்சி செய்கின்றனர் என மக்களவையில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லி, பிப்-11

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களை எம்.பி.யுமான ராகுல் காந்தில் இன்று மக்களவையில் பேசினார். அப்போது அப்போது வேளாண் சட்டங்கள் குறித்து விமர்சித்து பேசினார். இது விவசாயிகள் போராட்டம் அல்ல; இது தேசத்தின் போராட்டம். புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஆபத்து ஏற்படும். வேளாண் சட்டங்களால் இந்தியாவில் தானிய மார்க்கெட்டுகள் அழிக்கப்பட்டுவிடும். வேளாண் சட்டங்களின் உள்ளடக்கம் முழுவதையும் நாம் ஆராய வேண்டும். இந்தியாவின் சந்தை முறையை ஒழிப்பதற்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை வேளாண் சட்டம் அழிக்கிறது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். தொழிலதிபர்களுக்கு உணவு தானியத்தை விற்கும் விவசாயிகள், நீதிமன்றத்துக்கு செல்வதை தடுக்கிறது வேளாண் சட்டம். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 2-வது வேளாண் சட்டம், பொருள் பதுக்கலை ஊக்குவிக்கிறது. 3 வேளாண் சட்டங்கள் குறித்தும் மக்களவையில் விவாதிக்க வேண்டும்.

நாம் இருவர், நமக்கு இருவர் என்ற பாணியில் நாட்டை 4 பேர் ஆட்சி செய்கின்றனர். அதானி, அம்பானிக்காக மோடி, அமித்ஷா ஆட்சி நடத்துவதாக ராகுல் மறைமுகமாக சாடினார். தானியங்கள், காய்கறிகளை வைக்கும் பெருமைப்பான கிடங்குகள் அதானி, அம்பானி வசம் உள்ளன. வேளாண் சட்டங்களால் சிறு விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என கூறினார்.

ராகுல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர்கள் எதிர்ப்புக்கு காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பதிலடி கொடுத்தார். இருதரப்பும் அவையில் ஆவேசமாக பேசியதால் கடும் அமளி ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *