ஆழ்துளை உயிர் பலியை தடுக்க உயர் தொழில்நுட்பம் தேவை-மதிமுக
சென்னை, அக்டோபர்-31
மதிமுகவின் உயர்நிலைகுழு கூட்டம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் துணை பொது செயலாளர் மல்லை சத்யா மற்றும் உயர்நிலை குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. குறிப்பாக, சிறுவன் சுஜித் உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் பின்வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க போர்கால வேகத்தில் உரிய ஆய்வு நடத்தி, ஆள்துளை கிணறுகளை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மீட்க தேவையான உயரிய தொழில் நுட்பங்களை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றபட்டது.

தீபாவளி பண்டிகைக்கு மதுபான கடைகளில் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இந்த ஆண்டு 456.15 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது வெட்க கேடானது. மதுபான கடைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.