தமிழக சட்டசபை தேர்தல் எப்போது?- தலைமை தேர்தல் ஆணையர் பதில்

தமிழகத்தில் தேர்தல் எப்போது என்ற கேள்விக்கு தலைமை தேர்தல் ஆணையர் பதிலளித்துள்ளார்.

சென்னை, பிப்-11

தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக 2 நாட்கள் அரசியல் கட்சிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் தேர்தல் எப்போது என்ற கேள்விக்கு, தேர்தல் குழு டெல்லி சென்று பின்னர் முடிவெடுக்கப்பட்டு தேதி அறிவிக்கப்படும் என குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் பணப்புழக்கம், மற்றும் பணப்பட்டுவாடா போன்ற காரணங்களால், ஆர்.கே. நகர் மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன. பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பான புகாரின் பேரில், தேர்தல் ரத்து செய்யப்படுவது என்பது மிகவும் உச்சக்கட்ட நடவடிக்கை. வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தது தொடர்பான தகவல்கள் அடுத்த 24 மணி நேரத்தில் வெளியிடப்படும் என்று அறிவித்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் குமரி மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு நேரில் வர வேண்டும் என்று வலியுறுத்துவது நியாயமற்றது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *