கூவத்தூரில் எனக்கு டிடிவி தினகரன் ஊத்திக் கொடுத்தார்.. அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு
கூவத்தூரில் டிடிவி தினகரன்தான் எனக்கு ‘ஊத்திக்’ கொடுத்தார். அவரோட தொழிலே ‘ஊத்திக்’ கொடுப்பதுதான். ஊத்திக் கொடுத்தே குடியை கெடுத்தவர்கள் அவர்கள் என்று அமைச்சர் சிவி சண்முகம் காட்டமாக தெரிவித்துள்ளார். சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.வில் ஒருபோதும் சேர்க்க மாட்டோம் என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம், பிப்-11

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பச்சைதுண்டு போட்டுக்கொண்டு விவசாயிகள் பற்றி பேசினால் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் விவசாயி ஆகிவிட முடியாது. விவசாயம் பற்றி நன்கு தெரிந்தவர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. எத்தனையோ பணிகள் இருந்தாலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது கிராமத்துக்கு சென்று விவசாய பணிகளையும் பார்த்துவருகிறார். மு.க.ஸ்டாலின் அம்பானிவீட்டு பிள்ளை. விவசாயம் பற்றி ஒன்றும் தெரியாது. நான் அடிக்கடி உளறுகிறேன் என்று டி.டி.வி.தினகரன் என்னைபற்றி கூறிவருகிறார். என்னை நிதானமாகப் பேசினாரா என்று டிடிவி கேட்கிறார். ஆமா இவர் தான் எனக்கு ஊத்திகுடுத்தாரு. ஏன்னா அது டிடிவி தினகரனோட குலத்தொழில் அதான். ஊத்தி ஊத்திக்கொடுத்தே குடிய கெடுத்தவனுங்க அவனுங்க. கூவத்தூர்ல அது மாறி தான் ஊத்தி கொடுத்தான்… இல்லைனு சொல்ல சொல்லு அவன”.
டி.டி.வி.தினகரனிடம் இருந்து சசிகலா தப்பித்து கொள்ள வேண்டும். சசிகலாவுக்கு நான் எச்சரிக்கை விடுகிறேன். டி.டி.வி. தினகரன் குடும்பத்தில் இருந்து சசிகலா தன்னை காப்பாற்றி கொள்ளவேண்டும். அ.தி.மு.க. என்பது 1½ கோடி தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கமாகும். இனி ஒருபோதும் குடும்பத்தின் பிடியில் சிக்காது. சசிகலா- டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.வில் ஒருபோதும் சேர்க்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.