வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு திருமாவளவன் நேரில் ஆதரவு!

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

டெல்லி, பிப்-10

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் 26 முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் விவசாய பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற பல சுற்று பேச்சுவார்த்தைகளில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் டெல்லி-ஹரியாணா எல்லையில் போராடி வரும் விவசாயிகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் நேரில் சென்று சந்தித்தனர். போராட்டத்திலும் பங்கெடுத்த அவர்கள், விவசாயிகளுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *