இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,067 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,067 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி, பிப்-10

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,08,58,371 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 94 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,55,252 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,05,61,608 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 13,087 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,41,511 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 66,11,561 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நாடு முழுவதும் கடந்த 9-ஆம் தேதி வரை 20,33,24,655 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் 7,36,903 பேருக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *