நவ.10-ல் கூடுகிறது திமுக பொதுக்குழு!!!

சென்னை, அக்டோபர்-31

சென்னையில் நவம்பர் 10 ஆம் தேதி திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

திமுக பொதுக்குழு கூட்டம் தேதி ஏற்கனவே கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் காரணமாக அந்த தேதிக்கு பதிலாக வேறொரு நாளில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்து ஒத்திவைக்கப்பட்ட திமுக பொதுக்குழுக்கூட்டம் நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் உள்ள அரங்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள கேட்டுக்கொண்டுள்ள க.அன்பழகன், இந்தக் கூட்டத்தில் கட்சியின் சட்டதிட்ட திருத்தம், ஆக்கப்பணிகள், தணிக்கைக் குழு அறிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *