கராத்தே தியாகராஜன், சிவாஜி மகன் ராம்குமார் நாளை பாஜகவில் இணைகிறார்கள்.. கெத்து காட்டும் எல்.முருகன்!

முன்னாள் சென்னை மேயா் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன் நாளை வியாழக்கிழமை (பிப்.11) பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, பிப்-10

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, பல்வேறு முக்கியப் பிரமுகர்களை கட்சியில் இணைக்கும் பணிகளை தமிழக பாஜக தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயரும், காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் தென் சென்னை மாவட்ட முன்னாள் தலைவருமான கராத்தே தியாகராஜன் தனது ஆதரவாளர்களுடன் நாளை பாஜகவில் இணைய இருப்பதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் சட்டப்பேரவைத் தோ்தல் நிலைப்பாடு குறித்து தனது ஆதரவாளா்களுடன் கராத்தே தியாகராஜன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினாா். பின்னர் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக – பாஜக கூட்டணிக்கே தன்னுடைய ஆதரவு என்றும், விரைவில் அந்த இரு கட்சிகளில் ஏதாவது ஒன்றில் இணைவேன் என்றும் அவா் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் நாளை பாரதிய ஜனதா கட்சியில் தனது ஆதரவாளர்களுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல், நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம் குமார் நாளை, பாஜக தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைய இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *